Our Feeds


Friday, June 16, 2023

SHAHNI RAMEES

கொரிய தீபகற்பத்தில் பதற்றம் - தென் கொரியாவுக்கு நீர்மூழ்கி கப்பலை அனுப்பிய அமெரிக்கா

 


உலக நாடுகளின் பொருளாதார தடைகள் மற்றும்

எதிர்ப்பை மீறி வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகின்றது. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நீடித்துள்ளது.

அவ்வகையில், வடகொரியா நேற்று தனது கிழக்கு கடற்கரையில் இருந்து ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை கடலில் செலுத்தி சோதனை நடத்தியிருப்பதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. 


இந்நிலையில், அமெரிக்கா- தென் கொரியாவுக்கு நேரடி எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் வட கொரியா ஏவுகணைச் சோதனை நடத்திய ஒரு நாளுக்குப் பிறகு, தென் கொரியாவுக்கு சுமார் 150 டோமாஹாக் ஏவுகணைகளை எடுத்துச் செல்லும் திறன் கொண்ட அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலை அமெரிக்கா அனுப்பியுள்ளது.


யுஎஸ்எஸ் மிச்சிகன் எனப்படும் இந்த போர்கப்பல் உலகின் மிகப்பெரிய நீர்மூழ்கிக் கப்பல்களில் ஒன்றாகும். இது சுமார் 2,500 கிலோமீற்றர் வரை கொண்டு ஏவுகனை ஏவலாம் என்று கூறப்படுகிறது. 


இந்த போர்க்கப்பல் அனுப்பியதன் மூலம், அமெரிக்கா மற்றும் தென் கொரிய கடற்படைகள் தங்களது சிறப்பு செயல்பட்டுத் திறனை மேம்படுத்தவும், வட கொரிய அணு ஆயுத அச்சுறுத்தல்களை சமாளிக்கும் கூட்டு திறனை மேம்படுத்துவதற்காகவும் பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளதாக தென் கொரிய பாதுகாப்பு அமைச்சு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »