Our Feeds


Friday, June 16, 2023

SHAHNI RAMEES

இலங்கையில் இனப்படுகொலை நடக்கவில்லை – கனடா

 

இலங்கையில் இனப்படுகொலை நடந்ததாக உறுதிபடக் கூறும்  எந்தக் கண்டுப்பிடிப்பும் செய்யப்படவில்லை என்று கனேடியத் தலைவர்களுக்கிடையிலான கதையாடல்களின் மோதலில் கனடாவின் வெளிவிவகார அமைச்சு இலங்கை அரசாங்கத்திற்குத் தெரிவித்துள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கிலப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

 

கனடாவின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உட்பட அதன் தலைவர்கள் சிலரின் குற்றச்சாட்டுகளுக்கு முரணானது.

 

மார்ச் 21, 2021 அன்று பிரம்டனின் நகர சபையின் இனப்படுகொலை பற்றிய குறிப்பால் எழுப்பப்பட்ட கவலைகள் குறித்து கனேடிய வெளியுறவு அமைச்சகம் இலங்கை அதிகாரிகளுக்கு பதிலளித்ததாக தெரியவருகிறது.

 

மாநகரசபை மற்றும் மாகாண அரசாங்கங்கள் கனடாவின் கூட்டாட்சி அரசாங்கத்திடம் இருந்து சுதந்திரத்தை அனுபவிக்கின்றன என வலியுறுத்தும் அதேவேளையில், இலங்கையில் இனப்படுகொலை நடந்ததாக கனடா அரசாங்கம் கண்டறியவில்லை என்ற தனது உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை கனேடிய வெளிவிவகார அமைச்சு இலங்கைக்கு தெரிவித்துள்ளதாக இந்த பத்திரிகை மேலும் குறிப்பிட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »