Our Feeds


Sunday, June 11, 2023

Anonymous

சப்ரகமுவ மாகாண ஆளுனராகிறார் நவீன் திஸாநாயக்க ?

 



சப்ரகமுவ மாகாண ஆளுநராக பதவி வகித்த டிக்கிரி கொப்பேகடுவ, ஆளுநர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளதை அடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை, முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவைக் கொண்டு நிரப்புவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறியமுடிகின்றது.


அவருக்கான நியமனக்கடிதம் 13ம் திகதி செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்படும் என்று ஜனாதிபதியின் ஆலோசகர் ருவன் விஜயவர்தன தெரிவித்தார்.

டிக்கிரி கொப்பேகடுவ தன்னுடைய ஆளுநர் பதவியை, கடந்த வியாழக்கிழமை (8) இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »