Our Feeds


Saturday, June 24, 2023

ShortNews Admin

இரகசியமாக புதைக்கப்பட்ட குழந்தை : நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு



முந்தல் பகுதியில் பிறந்து 21 நாட்களே ஆன சிசுவொன்று இரகசியமாக புதைக்கப்பட்ட சம்பவம் குறித்து பொலிஸார் தங்களது சமர்ப்பணங்களை நீதிமன்றில் முன்வைத்துள்ளனர்.


அந்த பகுதிக்கு பொறுப்பான கிராம சேவகரால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமையவே பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.


முதற்கட்ட விசாரணையில், முந்தல் - அகுனாவில பகுதியை சேர்ந்த 35 வயதுடைய பெண்ணும் அவரது கணவரும் இணைந்து உயிரிழந்த சிசுவை புதைத்துள்ளமை தெரியவந்துள்ளது.


எனவே, பொலிஸார் முன்வைத்த சமர்ப்பணங்களுக்கு அமைய, புதைக்கப்பட்ட சிசுவின் சடலத்தை மீண்டும் தோண்டி எடுத்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »