நிட்டம்புவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கால்நடை பண்ணை ஒன்றில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் சுமார் 42 வயதுடையவர் எனவும் அவர் வசிக்கும் இடம் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர் கொழும்பிலிருந்து சென்று இந்தக் கால்நடை பண்ணையில் வேலை செய்ய வந்தவர்.
இந்தக் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவரை நிட்டம்புவ பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.