நிவ் டயமன்ட் மற்றும் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் அனர்த்தங்கள்
தொடர்பில் ஆராய்ந்து தேவையான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக பாராளுமன்ற தெரிவு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ரமேஸ் பத்திரன தலைமையில் இந்த தெரிவு குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
இதுதவிர, ஆளும் மற்றும் எதிர்கட்சியை சார்ந்த 14 உறுப்பினர்கள் இந்த தெரிவு குழுவில் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.