Our Feeds


Monday, June 12, 2023

Anonymous

அதிர்ச்சித் தகவல் - இலங்கையில் கடுமையான உணவு நெருக்கடி!

 



இலங்கையில் சுமார் 7.5 மில்லியன் மக்கள் தற்போது கடுமையான உணவு நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் மூத்த பேராசிரியர் பி.பி.ஏ.வசந்த அத்துகோரலவின் கூற்றுப்படி, ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பினால் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் இந்தத் தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 


இலங்கையில் வசிக்கும் 5.7 மில்லியன் குடும்பங்களில் 33% பேர் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன் விளைவாக, நாடு முழுவதும் சுமார் 7.5 மில்லியன் நபர்கள் இந்த நெருக்கடியால் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.


உணவு பாதுகாப்பு சுட்டெண்ணில் இலங்கையின் தற்போதைய தரவரிசை 79 ஆவது இடத்தில் உள்ளதாக பேராசிரியர் அத்துகோரள மேலும் குறிப்பிட்டார். நாட்டில் நிலவும் உணவு நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கும் தணிப்பதற்கும் ஒருங்கிணைந்த முயற்சிகளின் அவசரத் தேவையை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »