நாட்டில் எதிர்வரும் சில நாட்களில் 50 கிலோ கிராம் எடைக்கொண்ட சீமெந்து மூடையின் விலை குறைக்கப்படலாம் என அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
50 கிலோ கிராம் எடைக்கொண்ட சீமெந்து மூடையின் விலை கிட்டத்தட்ட 300 ரூபா வரையில் குறைக்கப்படலாம் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கொழும்பு மாவட்டத்தில், முச்சக்கர வண்டிகளின் பயணக் கட்டணம் குறைக்கப்பட உள்ளதாக, அகில இலங்கை முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
எரிபொருள் விலை குறைப்பு மற்றும் வாராந்த எரிபொருள் ஒதுக்கம் அதிகரிப்பு என்பனவற்றைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, கொழும்பு மாவட்டத்தில், நாளை முதல் முச்சக்கர வண்டிகளில், 2ஆம் கிலோமீற்றர் முதல் அறவிடப்படும் கட்டணம் 80 ரூபாவாக குறைக்கப்பட உள்ளது.
எனினும், முதலாவது கிலோமீற்றருக்கு அறவிடப்படும் 100 ரூபா கட்டணத்தில் மாற்றமில்லை என அகில இலங்கை முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.