கொழும்பு, கொம்பனி தெருவில் உள்ள வீடமைப்புத் தொகுதி ஒன்றில் வீடு பெற்றுத் தருவதாக கூறி சுமார் 300,000 அமெரிக்க டொலர்களை மோசடி செய்த குற்றச்சாட்டில் இந்தியப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சந்தேக நபர் வெளிநாடு செல்ல முற்பட்டபோது, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கட்டுநாயக்க பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
சந்தேக நபர் பலரிடம் 300,678 அமெரிக்க டொலர்களை மோசடி செய்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.