தண்டவாள திருத்தப்பணிகளுக்காக மூடப்பட்டிருந்த
அனுராதபுரம் - ஓமந்தை ரயில் சேவை அடுத்த மாதம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என ரயில்வே திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.கடந்த ஜனவரி மாதம் முதல் மூடப்பட்டிருந்த 62 கிலோமீற்றர் வீதி இந்திய கடனுதவியில் 3300 கோடி ரூபா செலவில் செப்பனிடப்பட்டுள்ளதாக குறித்த அதிகாரி தெரிவித்தார்.
ரயில் பாதை திறக்கப்பட்டதன் பின்னர் கொழும்பு கோட்டையிலிருந்து காங்கசந்துறை வரையான ரயில் சேவை மீண்டும் தொடரும் என அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்