சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட மருந்து தொகையுடன் சந்தேகநபர் ஒருவர், கல்பிட்டி - கரம்ப பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விற்பனைக்காகவே குறித்த மருந்து தொகையானது இவ்வாறு கொண்டு செல்லப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இதன்போது 42300 மருந்து அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இராஜகிரிய பகுதியைச் சேர்ந்த 29 வயதான சந்தேகநபரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்.