Our Feeds


Monday, June 12, 2023

News Editor

சாதனை படைத்த இலங்கை தமிழ் மாணவன்


 சர்வதேச விண்வெளிப் போட்டியில் வெற்றி பெற்று, தமிழர்களுக்கு பெருமை சேர்த்த மாணவனான, யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட அர்ச்சிகன் சாதனை படைத்துள்ளார்.


இலங்கையிலிருந்து அகதியாக புலம்பெயர்ந்து இந்தியாவில் கல்வி கற்றுவரும் ஈழத்தமிழ் மாணவனான விஜேந்திரகுமார் மேனகா தம்பதிகளின் புதல்வனான அர்ச்சிகன் அமெரிக்காவில் உள்ள தேசிய விண்வெளி சங்கம்  (National Space Society (NSS) சர்வதேச ரீதியாக மாணவர்களிடையே நடாத்திய போட்டியில் வெற்றி பெற்று பெருமை சேர்த்துள்ளார்.


விண்வெளியில் மனிதர்களைக் குடியமர்த்தும் போது பின்பற்ற வேண்டிய அறிவுசார் நுட்பங்களை உள்ளடக்கி, அவரது சிந்தனையில் உருவான செயற்றிட்டம் வெற்றி பெற்றுள்ளதாக NATIONAL SPACE SOCIETY (NSS)  அறிவித்துள்ளது.


உலகம் முழுவதும் 19 நாடுகளில் இருந்து 26725 பங்கேற்ற நிலையில், இலங்கை ஈழத்தமிழ் மாணவனான விஜேந்திரகுமார் அர்ச்சிகன் அனுப்பிய செயற்றிட்டத்தை NSS அங்கீகரித்து, அவரை வெற்றியாளராக அறிவித்தது.


அமெரிக்காவில் உள்ள டெஸ்ரா மாநிலத்தில் NSS அமைப்பின் தலைமையில் இடம்பெற்ற அறிவியல் மாநாட்டிற்கும் அவர் அழைக்கப்பட்டிருந்ததுடன், அங்கு உரையாற்றும் வாய்ப்பும் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »