உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பிரேரணையை விவாதிப்பதற்கான அவசர பாராளுமன்றக் கூட்டம் அடுத்த மாதம் 1ம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் விசேட கூட்டம் நாளை (27) காலை 11.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்த விவாதத்திற்குப் பிறகு அன்று பிற்பகலில் வாக்கெடுப்பு நடைபெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அவசர பாராளுமன்றக் கூட்டம் காரணமாக அனைத்து அமைச்சர்களையும் இந்த வாரம் கொழும்பில் தங்குமாறு ஆளும் கட்சி அமைப்பாளர் அலுவலகம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
மேலும் அவர்கள் வெளிநாடு செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாளை (28) நடைபெறவுள்ளது.
அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்றக் குழு இன்று (26) பிற்பகல் கூடி உள்ளுர் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தீர்மானித்துள்ளது.