முஸ்லிம்களின் உரிமைகளை இந்தியா பாதுகாக்காவிட்டால் இந்தியா மீண்டும் பிளவுபட வாய்ப்புள்ளதாக அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
இந்தியப் பிரதமர் மோடி அமெரிக்கா சென்ற நிலையில், கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா,
“இந்தியப் பிரதமர் மோடியுடன் நான் பேசியிருந்தால் இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள இந்தியாவில் சிறுபான்மை முஸ்லிம்களின் உரிமைகள் பாதுகாக்கப்படாவிட்டால் ஒரு கட்டத்தில் இந்தியா பிளவுபட வாய்ப்புள்ளது. என்பதை கூறியிருப்பேன்.” எனத் தெரிவித்துள்ளார்.