பிரபல சமூக வலைதள நிறுவனமான, ‛ட்விட்டர்' செயலியில், போலி செய்திகளை கண்டறிய, ‛நோட்ஸ் ஓன் மீடியா' என்ற புதிய வசதி, விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
உலகம் முழுதும், தகவல் பரிமாற்றம் மற்றும் பொழுது போக்கு செயலிகளில், அதிக பயனர்கள் பயன்படுத்தும் செயலியாக, ‛ட்விட்டர்' உள்ளது.
இதில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட போட்டோக்கள் முதல், திருத்தி அமைக்கப்பட்ட வீடியோக்கள் வரை, தவறாக வழிநடத்தும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களின் எண்ணிக்கை அதிகளவில் காணப்படுகின்றன.
இதை தடுக்க, ‛நோட்ஸ் ஓன் மீடியா' எனும், புது அம்சத்தை அறிமுகப்படுத்த, ட்விட்டர் சோதனை செய்து வருகிறது.
இதன்படி, ட்விட்டரில் பதிவிடப்படும் ஒரு படத்துடன் இணைக்கப்பட்டுள்ள குறிப்புகள், அந்தப் படத்தைக் கொண்ட தற்போதைய மற்றும் எதிர்கால ட்விட்களில் தானாகவே காண்பிக்கப்படும்.
இதற்கேற்ப, ட்விட்டரில் பதிவிடப்படும் பதிவுகளுக்கேற்ப, ‛அபவுட் தி இமேஜ்' எனும், விருப்ப பகுதியும் இடம்பெறும்.
இந்த விருப்பத்தை பயனர்கள், தேர்வு செய்தால், அவர்களால், தவறான தகவல்கள் மற்றும் போலி செய்திகளை அடையாளம் காண முடியும்.
தற்போதைய நிலையில், ஒரே ஒரு படம் உள்ள ட்விட்டகளில் மட்டும், இம்முறை சோதனை செய்யப்பட்டு வருகிறது.
வருங்காலத்தில், இதை முழுதும் விரிவாக்கம் செய்வதற்கான பணிகள் நடந்து வருவதாகவும், ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.