புனித ஹஜ் கடமையினை நிறைவேற்ற இலங்கையிலிருந்து சென்றுள்ள ஹஜ் யாத்ரீகர்களில் சுமார் 200க்கு மேற்பட்டோர் மினா மற்றும் அரபா ஆகிய இடங்களில் தங்குவதற்கு கூடாரங்களின்றி சிரமப்படுவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஹஜ் யாத்ரீகர் இலங்கை நேரப்படி நேற்று (26) திங்கட்கிழமை இரவு மினா சென்றடைந்துள்ளனர். எனினும் அங்கு சென்ற இலங்கை யாத்ரீகர்களில் சுமார் 200க்கு மேற்பட்டோர் தங்குவதற்கான கூடாரங்கள் ஏற்பாடு செய்யப்படவில்லை.
இவ்வாறான நிலையில் இன்று (27) செவ்வாய்க்கிழமை புனித ஹஜ்ஜின் முக்கிய அமல்களில் ஒன்றான அரபா மைதானத்தில் தரிப்பதற்காக சென்ற யாத்ரீகர்கள் தங்குதவற்கு தேவையான கூடாரங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கவில்லை.
இதனால், குறித்த நூற்றுக்கணக்கான யாத்திரீகர்கள் தங்குவதற்கு கூடாரமின்றி சிரமப்படுவதாக அங்குள்ள தகவல்கள் விடியல் இணையத்தளத்திற்கு தெரிவித்தன.