ஏறாவூரை சேர்ந்த 14 வயது சிறுவனின் கிரிக்கெட் திறமை குறித்து சமூக ஊடகங்களில் வெளியான தகவலை தொடர்ந்து அந்த சிறுவனிற்கு ஆதரவளிப்பதற்கு நிறுவனமொன்று முன்வந்துள்ளது.
யாராவது இந்த சிறுவனை கொழும்பிற்கு கூட்டிச்செல்லுங்கள் இந்த சிறுவன் அசாத்தியமான கிரிக்கெட் திறனை வெளிப்படுத்துகின்றான் என்ற தகவல் சிறுவனின் படத்துடன் சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்தது.
ஏறாவூரை சேர்ந்த இந்த சம்ஹன் என்ற சிறுவன் 141 பந்துகளில் 209 ஓட்டங்களை பெற்றுள்ளான் இதில் 37 பவுண்டரிகளும் ஆறு சிக்சர்களும் அடங்கும் எனவும் அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்ததுடன் 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டியில் அந்த சிறுவன் ஹட்ரிக் எடுத்ததாகவும் இடமு கை துடுப்பாட்ட வீரன் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த சமூக ஊடக பதிவு வைரலான நிலையில் சிறுவனிற்கு உதவுவதற்கு நிறுவனமொன்று முன்வந்துள்ளது.
சிறுவனிற்கு கிரிக்கெட் புலமைப்பரிசில் ஒன்றை வழங்குவதற்கும் அவனது எதிர்கால பயணத்தில் உதவுவதற்கும் நாங்கள் முன்வந்துள்ளோம், கிழக்கு மாகாணத்தில் பயன்படுத்தப்படாத கிரிக்கெட் திறமை உள்ளது கிரிக்கெட் உலகளாவியது உங்களிற்கு திறமையிருந்தால் அர்ப்பணிப்பிருந்தால் உலகம் உங்களிற்கு பரிசளிக்கும் நாங்கள் இந்த சிறுவனின் எதிர்காலத்திற்கு வாழ்த்துகின்றோம் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.