டெஸ்லா இன்க் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் மீண்டும் உலகின் முதல் பணக்காரர் என்ற அந்தஸ்த்தை பெற்றுள்ளார்.
இவர் பெர்னார்டு அர்னால்டை பின்னுக்கு தள்ளிவிட்டு மீண்டும் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
மே 31 ஆம் திகதி அர்னால்டு டுஏஆர் பங்குகள் 2.6 சதவீதம் வரை சரிந்ததை தொடர்ந்து, பணக்காரர்கள் பட்டியலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
பிரான்ஸ் வியாபாரியான 74 வயது பெர்னார்ட் மற்றும் எலான் மஸ்க் இடையே உலகின் பணக்காரர் யார் என்பதில், இந்த ஆண்டு ஆரம்பத்திலிருந்தே கடும் போட்டி நிலவியது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அர்னால்ட் எலான் மஸ்க்-ஐ கடந்து உலகின் முன்னணி பணக்காரர் என்ற அந்தஸ்தை பெற்றார்.
தொழில்நுட்ப துறையில் பெரும் சரிவு நிலை நிலவி வந்த போது, அர்னால்ட் உலகின் முதல் பணக்காரர் ஆனார். லூயிஸ் விட்டன்,
ஃபெண்டி மற்றும் ஹெனசி போன்ற பிராண்டுகளை நிறுவியவர் அர்னால்ட் ஆவார்.
ஒரு கட்டத்தில் அர்னால்ட் சொத்து மதிப்பு ஒரே நாளில் 11 பில்லியன் டொலர்கள் வரை வீழ்ச்சியடைந்தது. மறுபக்கம் எலான் மஸ்க் இந்த ஆண்டு 55.3 பில்லியன் டொலர்களை ஈட்டியிருக்கிறார்.
இதில் பெரும்பாலான வருவாய் டெஸ்லா நிறுவனத்தில் இருந்து கிடைத்தவை ஆகும். ஆஸ்டினை சேர்ந்த எலான் மஸ்க்-ன் மொத்த சொத்து மதிப்பு 192.3 பில்லியன் டொலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. அர்னால்ட்-ன் சொத்து மதிப்பு 186.6 பில்லியன் டொலர்கள் ஆகும்.