ஆசியாவை பிளவுபடுத்த இடமளிக்க மாட்டோம் என உலகத்தின் முன் துணிச்சலாக அறிவித்த ரணில் விக்கிரமசிங்க, இலங்கையின் ஜனாதிபதியாக செயற்படுவது முழு ஆசியாவிற்கும் விசேட பாதுகாப்பு என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இதே நிலைப்பாட்டை ஜப்பானில் நடைபெற்ற நிக்கேய் உச்சி மாநாட்டிலும் ஜனாதிபதி கடுமையாக வெளிப்படுத்தியதாகவும், ஜனாதிபதி தெளிவான வெளிவிவகாரக் கொள்கையைக் கொண்டுள்ளார் என்பதை அவர் வெளிப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டவர்களுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை இரத்து செய்ய முடியாத வகையில் நாடாளுமன்றத்தில் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை நிறைவேற்ற முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
“…மேலும், இலங்கை மீதான ஜப்பானின் நம்பிக்கையை உறுதிப்படுத்துவதோடு, ஜப்பான் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து இலங்கை தொடர்பில் ஜப்பானில் நிலவும் அவநம்பிக்கை மற்றும் சந்தேகங்களை நீக்குவதற்கும் தெளிவற்ற சூழ்நிலைகளை களைவதற்கும் ஜனாதிபதியின் விஜயம் உதவியது.
குறிப்பாக நம்மால் தன்னிச்சையாக இரத்து செய்யப்பட்ட இலகுரக ரயில் போக்குவரத்து திட்டம் போன்றவற்றை மீண்டும் தொடங்கும் அளவுக்கு அந்த முடிவுகளை செயல்படுத்தினார்.
இப்போது பாராளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் இந்த சூழ்நிலையில் கவனமாக செயல்பட வேண்டும். ஒரேயடியாக ராஜபக்சர்களை திருடர்கள் என்று முத்திரை குத்துகிறார்கள். அதன்பிறகு, ராஜபக்சவால் நியமிக்கப்பட்டவர்களை காக்க, மீண்டும் வாக்களித்து, போலியான நடைமுறையை பின்பற்றுகின்றனர்.
இந்த நிலையில் இலங்கைக்கு எதிர்காலம் அமைய வேண்டுமானால் இவர்கள் அனைவரும் இந்த இரட்டை நிலைகளை விட்டுவிட்டு இந்த நாட்டின் தேசிய பிரச்சினைகளை நேர்மையாக பார்க்க வேண்டும்…” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.