(எம்.மனோசித்ரா)
தேசிய எல்லை நிர்ணய குழுவின் இடைக்கால அறிக்கைக்கு பெருமளவான கட்சிகள் தமது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுவரை வெவ்வேறாக காணப்பட்ட பல தொகுதிகளை இணைத்து, ஒரு தொகுதியாக்குவதற்கான யோசனை குறித்த அறிக்கையில் முன்மொழியப்பட்டுள்ளதால், சில மக்கள் குழுக்களுக்கு அதனால் அநீதி இழைக்கப்படும் என்பதால் கட்சிகள் அதனை ஏற்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை புதிய முறைமைக்கு பதிலாக பழைய விருப்பு முறைமையிலேயே நடத்துவதற்கு பெரும்பான்மையான அரசியல் கட்சிகள் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வேட்பாளர் பட்டியலில் இளைஞர் பிரதிநிதிகளுக்கு 25 வீதத்தை வழங்குவதற்கான பிரேரணைக்கு விரைவில் பாராளுமன்ற அங்கீகாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.