உலக சந்தையில் இன்று (24) தங்கத்தின் விலை 6 டொலர்களால் அதிகரித்து ஒரு அவுன்ஸ் 1921 டொலர்களாக காணப்படுகிறது.
நேற்றைய தினம் கொழும்பு செட்டியார் தெருவில், 24 கெரட் தங்கம் ஒரு இலட்சத்து 61 ஆயிரம் ரூபாவாகவும், 22 கெரட் தங்கம் ஒரு இலட்சத்து 49 ஆயிரம் ரூபாயாகவும் மாற்றமடைந்தன.
கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை குறைவடைந்து வந்த நிலையில் இன்று ஓரளவுக்கு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.