அவிசாவளை பிரதான பஸ் நிலையத்துக்கு அருகில் உள்ள வர்த்தக வளாகத்தில் கடையொன்றை வழங்குவதற்காக வர்த்தகர் ஒருவரிடம் 4 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற முயன்ற குற்றச்சாட்டின் பேரில் சீத்தாவக்கபுர நகர சபையின் செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக அதிகாரி ஆகியோர் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உரிய ஆவணங்களை விரைவாக தயாரிப்பதற்காக 5 இலட்சம் ரூபாவை முறைப்பாட்டாளரான வர்த்தகரிடம் சந்தேக நபர்கள் கோரிய நிலையிலேயே 4 இலட்சம் ரூபாவை பெற்றபோது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, சந்தேக நபர்கள் இருவரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.