Our Feeds


Sunday, June 11, 2023

Anonymous

ஆப்கானிஸ்தானில் கடும் உணவுத் தட்டுப்பாடு - மீண்டும் உதவுவதாக அறிவித்தது இந்தியா!

 



ஆப்கானிஸ்தானில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் அமெரிக்க படைகள் முழுவதுமாக வெளியேறிய பிறகு ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றினர்.



அதன்பின் தலிபான்கள் பல்வேறு கடும் கட்டுப்பாடுகளை விதித்தனர். இதற்கிடையே ஆப்கானிஸ்தானில் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 


இதையடுத்து ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா உதவி வழங்கியுள்ளது. அந்நாட்டுக்கு 50 ஆயிரம் மெட்ரிக்டொன் கோதுமை வழங்கப்படும் என்று இந்தியா அறிவித்தது. 


அதன்படி கடந்த 2021 ஆம் ஆண்டு 40 ஆயிரம் மெட்ரிக் டொன் கோதுமையை பாகிஸ்தான் எல்லை வழியாக ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா அனுப்பியது. 


இந்த நிலையில் உணவு பாதுகாப்பின்மையால் தவிக்கும் ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா உணவு தானியங்களை வழங்கியுள்ளது. 


ஏற்கனவே அறிவிக்கப்பட்டதில் 10 ஆயிரம் மெட்ரிக் டொன் உணவு தானியங்களுடன் சேர்த்து கூடுதலாக 10 ஆயிரம் மெட்ரிக் டொன் தானியங்கள் என 20 ஆயிரம் மெட்ரிக் டொன் தானியங்கள் அனுப்பப்படுகின்றன. 


இந்த தானியங்கள் ஈரானின் சபஹர் துறைமுகம் வழியாக அனுப்பப்படுகிறது.


இதில் 2,500 மெட்ரிக் டொன் கோதுமையின் முதல் தவணை இந்த வாரம் ஆப்கானிஸ்தானின் ஹெ ராத் நகருக்கு சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »