மெக்சிகோவின் கடற்கரை பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது 6.3 ரிச்டர் அளவில் ஏற்பட்டுள்ளது.
மேலும், இந்த நிலநடுக்கம் கபோ சான் லூகாஸுக்கு மேற்கே 86 மைல் தொலைவில் 33 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல் இதுவரையில் வெளியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.