Our Feeds


Tuesday, June 6, 2023

SHAHNI RAMEES

டயனாவின் பதவி குறித்து நீதிமன்றம் இன்று தீர்ப்பு

 

பிரித்தானிய பிரஜாவுரிமை பெற்றுள்ளதாகக் கூறப்படும் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிப்பேராணை மனு மீதான தீர்ப்பு, மேல்முறையீட்டு நீதிமன்றினால் இன்று அறிவிக்கப்படவுள்ளது.



இந்த மனு, நீதியரசர்களான நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் எம். ஏ. ஆர். மரிக்கார் ஆகியோரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதன் பின்னர், தீர்ப்புக்காக இன்றைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.



இந்த மனுவில் குடிவரவு கட்டுப்பாட்டாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.



பிரித்தானியப் பிரஜை எனக் கூறப்படும் டயனா கமகே இலங்கைப் பிரஜாவுரிமையைப் பெறாத காரணத்தினால் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கத் தகுதியற்றவர் என உத்தரவிடக்கோரி சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »