Our Feeds


Thursday, June 29, 2023

ShortNews Admin

அடுத்த ஹஜ் பண்டிகையின் போது பொருளாதார சிக்கல்களில் இருந்து முழுமையாக விடுபட அனைவரின் பங்களிப்பும் அவசியம் - ஜனாதிபதி



பிராந்திய மற்றும் உலகளாவிய இலக்குகளை அடைவதற்கான பொதுவான நோக்கத்தில் கைகோர்க்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.


அடுத்த ஹஜ் பண்டிகையின் போது பொருளாதார மற்றும் சமூக சிக்கல்களில் இருந்து முழுமையாக விடுபட அனைவரின் பங்களிப்பும் பங்கேற்பும் ஒத்துழைப்பும் மிகவும் முக்கியமானது என ஜனாதிபதி தமது ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

கடினமான சூழ்நிலையை எதிர்நோக்கிய அந்த கஷ்டங்களைச் சமாளித்து நாட்டை தற்போதைய நிலைக்குக் கொண்டு வருவதற்கு மக்களின் தியாகம், அர்ப்பணிப்பு மற்றும் பொறுமை ஆகியவை மிகவும் சாதகமான காரணங்களாக அமைந்ததாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். (a)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »