பாதுகாப்பமைச்சின் புதிய செயலாளராக சாகல ரத்னாயக்கவை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசித்துவருவதாக உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
தற்போதைய செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவின் இடத்திற்கே, சாகல நியமிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மேற்கு தொகுதியின் புதிய அமைப்பாளராகவும் ஜனாதிபதி பணியாளர் குழாமின் பிரதானியாகவும் சாகல ரத்நாயக்க தற்போது செயற்படுகிறார்.
இவ்வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறலாம் என்று கருதப்படுவதால் அதற்கு முன்னதாக அரச நிர்வாக சேவையில் பல மாற்றங்களைச் செய்ய ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக அறியமுடிகின்றது.