ஒரு இலட்சம் ரூபாய்க்கு மேல் மாதாந்த கொடுப்பனவுகளை பெறும் சகலரும் மற்றும் பல துறைகளில் ஈடுபடும் நபர்களும் இன்று (01) முதல் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் பதிவு செய்வது கட்டாயமாக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைவாக, வைத்தியர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள், கணக்காளர்கள், வங்கிகள், வணிகங்கள், சொத்துக்கள் அல்லது குறிப்பிட்ட வாகனங்களை வைத்திருப்பவர்கள் உட்பட பல துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களுக்கு இது கட்டாயம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதி மற்றும் பொருளாதார ஸ்திரப்படுத்தல் அமைச்சராக வர்த்தமானி அறிவித்தலில் தெரிவித்துள்ளார்.
பதிவு செய்ய வேண்டிய அனைத்து நபர்களும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளனர்.
* இலங்கை மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்த மருத்துவர்கள்.
*இலங்கை பட்டயக் கணக்காளர்கள் நிறுவகத்தின் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள்
*இலங்கையின் சான்றளிக்கப்பட்ட முகாமைத்துவ கணக்காளர் நிறுவகத்தின் உறுப்பினர்கள்
* இலங்கை பொறியியல் நிறுவனத்தின் உறுப்பினர்கள்
* இலங்கை வங்கியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள்
* இலங்கை கட்டிடக் கலைஞர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள்
* இலங்கையின் அளவு ஆய்வாளர்கள் நிறுவனத்தின் உறுப்பினர்கள்
* உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள்
* பிரதேச செயலாளரின் கீழ் வணிகங்களை பதிவு செய்த நபர்கள்
* மோட்டார் வாகனத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களைக் கொண்ட நபர்கள் (முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கை உழவு இயந்திரங்கள் தவிர)
* இலங்கையில் ஒரு அசையாச் சொத்தை வாங்கிய அல்லது வாங்கியவர்கள் மற்றும் பத்திரத்தை மாற்றியவர்கள்
* ஊழியர்-பணியாளர் இரு தரப்பிலிருந்தும் மாதாந்தம் ரூ. 20,000-க்கு மேல் பங்களிப்புத் தொகையை ஏதேனும் ஒரு பணிக்கொடை நிதிக்கு உரிமையுள்ள பணியாளர்கள்
* உள்ளூர் அதிகாரசபையிடமிருந்து கட்டிட அனுமதித் திட்டத்தைப் பெற்ற எவரும்
* இலங்கையில் மாதாந்தம் ரூ.100,000 அல்லது வருடாந்தம் ரூ.1,200,000 மாதச் சம்பளம் பெறும் வேறு எவரும்