Our Feeds


Friday, June 9, 2023

Anonymous

ஸ்ரீலங்கா ரெலிகொம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு!

 



ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தை தனியார் மயப்படுத்துவது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழு இன்று (09) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கை தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.



இந்த அறிக்கை, பல்வேறு விடயங்களை உள்ளடக்கியிருந்தாலும், அவதானம் செலுத்தப்பட்ட துறைகள் தொடர்பில் தர்க்க ரீதியான அல்லது அறிவியல் பூர்வமான தரவுப் பகுப்பாய்வின் அடிப்படையில் இல்லாமை, கடுமையான குறைபாட்டைக் காட்டுகிறது என்று அரசாங்கம் கருதுகிறது. 


குறிப்பாக, இந்நாட்டில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் செயற்பாடு, அந்த நிறுவனங்கள் தற்போது எவ்வாறு ஒழுங்குபடுத்தப்படுகின்றன, தகவல் மற்றும் தொடர்பாடல் துறை தொடர்பான நிதித் தரவுகள், இத்துறை தொடர்பில் இலங்கையின் தேசிய இலட்சியம், அதனை அடைவதற்கான மூலதனத் திறன், அத்துடன் உலகப் போக்குகள் பற்றிய முறையான ஆய்வு மற்றும் பகுப்பாய்வும் அவசியம்.


மேலும், அரசாங்கம் எடுத்துள்ள இந்த கொள்கை ரீதியிலான முடிவின் காரணமாக, இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளபடி, தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்பதை அரசாங்கம் உறுதி செய்துள்ளது.


எனவே, இந்த அறிக்கை மற்றும் தகவல் தொடர்பாடல் துறையின் பரிந்துரைகளை கருத்திற்கொண்டு எதிர்வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.


அரசாங்கம் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடாது, தனியார் துறையினருக்கு அந்த வாய்ப்பை வழங்குவதே தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »