தென் கொரியாவில் இன்று சியோலின் கிழக்கே உள்ள நெடுஞ்சாலையில் மூன்று பாடசாலை பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் மாணவர்கள் உட்பட 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
பாடசாலை பேருந்துகளில் 75 நடுநிலைப் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிலர் சென்றுக் கொண்டிருந்தபோது ஹாங்சியோன் மாகாணத்தில் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் 80 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் சிக்கிய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை காயங்களுடன் மீட்புப் படையினர் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.