Our Feeds


Wednesday, June 14, 2023

News Editor

அந்நிய செலாவணியை மேலும் 6 மாதங்களுக்கு மட்டுப்படுத்த தீர்மானம்


 இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பை தொடர்ந்து கட்டியெழுப்புவதற்காக நாட்டிலிருந்து வெளியேறும் அந்நிய செலாவணியை மேலும் ஆறு மாதங்களுக்கு மட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சர் என்ற ரீதியில் எதிர்வரும் 30ஆம் திகதி முதல் 6 மாத காலத்திற்கு நாட்டிலிருந்து வெளிவரும் அந்நிய செலாவணியை மட்டுப்படுத்த அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார்.

 

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் அனுப்பும் டொலர்களின் அதிகரிப்பு மற்றும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்த போதிலும் அது போதுமானதாக இல்லை என அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

 

இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு முன்னர், இலங்கையிடம் 8.2 பில்லியன் அமெரிக்க டொலர் உத்தியோகபூர்வ கையிருப்பு இருந்ததுடன், மத்திய வங்கி விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் அடுத்த வருடம் 30 ஆம் திகதி முதல் 6 மாத காலத்திற்கு இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக பந்துல குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

 

கடனை மறுசீரமைக்கும் பேச்சுவார்த்தைகளை இலக்காகக் கொண்டு செப்டெம்பர் மாதம் நிறைவு செய்ததன் பின்னர், மூலதனத்தை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யவுள்ளதாக பந்துல குணவர்தன மேலும் கூறினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »