அச்சாறை உண்ட 60க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹங்குரன்கெத்த, பொரமடுல்ல பகுதியில் உள்ள பாடசாலையொன்றின் மாணவர்கள் குழுவொன்றே ஒவ்வாமை ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உடலில் அரிப்புக்கள் மற்றும் தடிப்புகளுடன் அந்த மாணவர்கள் ரிகில்லகஸ்கட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலையில் உணவுக் கண்காட்சி இடம்பெற்றதாகவும், உணவுக் கண்காட்சியின் போது அச்சாறை உட்கொண்ட மாணவர்களுக்கே உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.