Our Feeds


Wednesday, June 14, 2023

Anonymous

கல்வி அமைச்சின் மற்றுமொரு நற்செய்தி - பட்டதாரி ஆசிரியர்களாக மேலும் 5,500 பேருக்கு விரைவில் நியமனம்!

 



பட்டதாரி ஆசிரியர்களாக மேலும் 5,500 பேர்  விரைவில் சேவைக்கு  இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சர்  சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.


பௌதீக வளங்களுடன் மனித வளத்தையும் பூர்த்தி செய்து பாடசாலை முறைமை அபிவிருத்தி செய்யப்பட வேண்டுமென அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விஞ்ஞானம், கணிதம், தொழில்நுட்பம், மொழி, புவியியல், வர்த்தகம் ஆகிய  பாடங்களுக்கு மூன்று மொழிகளிலும் 5,500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு விரைவில் நியமனம் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »