Our Feeds


Wednesday, June 14, 2023

Anonymous

ஜம்மு-காஷ்மீரில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம் – அச்சத்தில் மக்கள்

 



ஜம்மு - காஷ்மீர் மாநிலம் மலைப்பகுதி மாவட்டங்களான தோடா மற்றும் கிஷ்த்வாரில் நேற்று 5.4 ரிச்டர் அளவில் நில நடுக்கம் ஏற்படது. இதில் பல கட்டிடங்கள் சேதம் அடைந்தன. இரண்டு குழந்தைகள் உள்பட ஐந்து பேர் காயம் அடைந்தனர். முன்னெச்சரிக்கை காரணமாக பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது.

 

இந்த நிலையில் இன்று காலை அப்பகுதிகளில் மீண்டும் அடுத்தடுத்து நான்கு முறை நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

 

நிலஅதிர்வு ஏற்பட்ட இடங்கள்

 

1. இன்று காலை 8.29 மணியளவில் கிஷ்த்வாரில் 3.3 ரிச்டர் அளவில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது

 

2. தோடாவில் 7.56 மணியளவில் நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது. இவை இரண்டும் 10 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டதாக நிலஅதிர்வுக்கான தேசிய மையம் (NCS) தெரிவித்துள்ளது.

 

3. 2.20 மணியளவில் 4.3 ரிச்டர் அளவில் தோடா மாவட்டத்தில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது

 

4. ரியாசி மாவட்டம் கிழக்கு கத்ராவில் இருநது 74 கி.மீட்டர் தொலைவில் 2.8 ரிச்டர் அளவில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது.

 

நேற்று 5.4 ரிச்டர் அளவில் ஏற்பட்ட நில நடுக்கத்தை தொடர்ந்து இன்று அதிர்வு ஏற்பட்டுள்ளது.

 

கடந்த ஐந்து ஆண்டுகளாக இதுபோன்று சிறிய சிறய அதிர்வுகள் வழக்கத்திற்கு மாறாக ஏற்பட்ட வண்ணம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »