மகா ஓயா நில்லம்ப பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் உணவு விஷமானதில் பாதிகப்பட்ட 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் திடீரென சுகவீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து குறித்த மாணவர்கள் மகா ஓயா ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக தெரியவருகிறது.
மாணவர்கள் இன்று (28) காலை உணவை உட்கொண்ட பின்னர் இவ்வாறு சுகவீனமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.