டைட்டானிக்கின் சிதைவுகளை நோக்கி சென்ற நீர்மூழ்கி காணாமல்போனதை அறிந்தவுடன் பேரிழப்பு ஏற்படப்போகின்றது என தனது உள்ளுணர்வு தெரிவித்தது என டைட்டானிக் திரைப்பட இயக்குநர் ஜேம்ஸ் கமரூன் தெரிவித்துள்ளார்.
டைட்டானிக் சிதைவுகள் காணப்படும் பகுதிக்கு 33 தடவைகள் சென்று வந்தவர் அவர்.
நீர்மூழ்கி காணாமல்போன செய்தி வெளியான வேளை நான் கப்பலில் இருந்தேன் திங்கட்கிழமையே நான் அறிந்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.
நீர்மூழ்கியுடன் தொடர்பாடல் இழக்கப்பட்டதை அறிந்ததும் பேரிடர் நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகித்தேன் என ஜேம்ஸ் கமரூன் தெரிவித்துள்ளார்.
என்ன நடந்திருக்கலாம் என்பதை உள்ளுணர்வு தெரிவித்தது நீர்மூழ்கியின் இயந்திரங்களும் தொலை தொடர்பும் இழக்கப்படுவது என்றால் நீர்மூழ்கி ஆபத்தில் சிக்கிவிட்டது. இழக்கப்பட்டுவிட்டது என்றே அர்த்தம் என அவர் தெரிவித்துள்ளார்.
எனது தொடர்பில் உள்ள ஆழ்கடல் கலங்கள் குறித்து விபரங்களை நன்கு அறிந்தவர்களை உடனடியாக நான் தொடர்பு கொண்டேன் சில மணித்தியாலங்களில் எனக்கு பலவிடயங்கள் தெரியவந்தன. அவர்கள் 3500 மீற்றர் ஆழத்தில் காணப்பட்டனர் 3800 மீற்றரை நோக்கி சென்றுகொண்டிருந்தனர் என்பதை நான் அறிந்தேன் எனவும் ஜேம்ஸ் கமரூன் தெரிவித்துள்ளார்.
அவர்களின் தொடர்பாடல் இழக்கப்பட்டது வழிச்செலுத்துதல் இழக்கப்பட்டது பெரும் பேரழிவு இடம்பெறாமல் இரண்டையும் இழக்க முடியாது என நான் தெரிவித்தேன் ஒரு வெடிப்பே எனது மனதில் முதலில் தோன்றியது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஒரு வாரகாலமாக அச்சம் தரும் நாடகம் இடம்பெற்றது போல உணர்ந்தேன் நீர்மூழ்கிக்குள் இருந்துத ட்டும் சத்தம் கேட்கின்றது ஒக்சிசன் போன்றவை குறித்து பலர் கதைத்தார்கள் நீர்மூழ்கி ஆழ்கடலில் இருக்கின்றது எனக்கு தெரியும் நான் நினைத்த இடத்திலேயே அதனை கண்டு பிடித்தார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
1912ம் ஆண்டு டைட்டானிக் இழப்பு போன்று டைட்டன் மற்றும் அதன் குழுவினரின் இழப்பில் ஒரு முரண்நகை உள்ளது எச்சரிக்கைகளிற்கு செவிசாய்க்காததால் இன்னுமொரு இழப்பு ஏற்பட்டுள்ளது ஓசன்கேட் எச்சரிக்கப்பட்டிருந்தது என கமரூன் தெரிவித்துள்ளார்.