Our Feeds


Tuesday, June 6, 2023

ShortNews Admin

32 வருடங்களின் பின் 8.6 ஏக்கர் காணியை விட்டு வெளியேறியது இராணுவம்!



மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட முறக்கொட்டாஞ்சேனை பிரதான வீதியை அண்மித்த பொதுமக்களின் காணிகளும் பாடசாலை காணி , பாடசாலை மைதானம் என்பன கடந்த (1991 முதல்) 32 வருடங்களாக இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட இராணுவ முகாம் அமைந்திருந்த 8.6 ஏக்கர் காணி இன்று விடுவிக்கப்பட்டது. 


களுவங்கேணி முறக்கொட்டாஞ் சேனை திருமலை வீதியுடன் இணைக்கும் பாதையும் கடந்த 1991ம் ஆண்டில் இருந்து 32 வருடங்களாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தமையினால் பொது மக்கள் பல சிரமங்களை எதிர்கொண்டு மாற்று பாதைகளை பயன்படுத்தி வந்த நிலையில் இன்று குறித்த பாதையும் இன்று திறந்து வைக்கப்பட்டது. 


 

மாவட்ட அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர் ஆகியோர் முன்னிலையில் கிழக்குமாகாண இராணுவ தளபதி காணி விடுவிப்பு பத்திரத்தை வழங்கி வைத்தார் பின்பு தனியார் காணிகள் காணி உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டது.


இராமகிருஸ்ண மிஷன் பாடசாலை காணி தொடர்ந்து இராணுவத்தின் வசமே உள்ளது.


 இந் நிகழ்வில் கிழக்கு மாகண ராணுவ தளபதி மேஜர் ஜெனரல் சுஜிப கெட்டியாராட்சி,

மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா, உதவி அரசங்க அதிபர் காணி நவரூபரஞ்சினி முகுந்தன் மற்றும் கோறளைபற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் எஸ். ராஜ்பாவு பிரிகேடியர் இரந்த ரத்னநாயக்க முறக்கொட்டாஞ்சேனை இராணுவ முகாம் அதிகாரி மாவட்ட பொலிஸ் பொறுப்பாதிகாரி பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.


-கிரான் நிருபர்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »