சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் அடங்கிய கொள்கலனை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இதில் சுமார் 300 மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்கள் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
200 மில்லியன் ரூபா பெறுமதியான அழகுசாதனப் பொருட்கள், மூன்று வாகனங்களை ஒன்று சேர்ப்பதற்குத் தேவையான பாகங்கள், மதுபானம் மற்றும் சிகரெட்டுகள் என்பன குறித்த கொள்கலனில் காணப்பட்டதாக சுங்க அதிகாரிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.
வாகன உதிரி பாகங்கள் இறக்குமதி செய்யப்படுவதாக குறிப்பிட்டு இந்த கொள்கலன் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்த மேலதிக விசாரணைகளை சுங்கப்பிரிவினர் மேற்கொண்டுள்ளனர்.