நாட்டில் ஆண்டொன்றுக்கு 2 இலட்சத்து 40 ஆயிரம் பேர் விசர்நாய்க் கடிக்குள்ளாவதாக சுகாதார அமைச்சின் விபத்து தடுப்புப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், ஆண்டொன்றுக்கு மூன்று இலட்சம் பேர் விலங்குக் கடிக்குள்ளாவதுடன் அவர்களுள் ஒரு இலட்சம் பேர் கடுமையான பாதிப்புகளை எதிர்நோக்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அனைத்துவிதமான விலங்கு கடிக்குள்ளாவோரின் சிகிச்சைகளுக்காக ஆண்டுதோறும் ஒரு பில்லியன் ரூபா அரசாங்கத்தினால் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இதுகுறித்து சுகாதார அமைச்சின் விபத்து தடுப்புப் பிரிவின் பிரதானி, விசேட வைத்தியர் சமித சிறிதுங்க மேலும் தெரிவிக்கையில்,
விலங்குக் கடிக்குள்ளாகும் ஒருவருக்கு பெற்றுக்கொடுக்கப்படும் நான்கு வகையான தடுப்பூசிகளுக்காக 10ஆயிரம் ரூபா செலவி டப்படுகிறது. அத்தோடு அதற்கும் மேலதிகமாக பெற்றுக்கொடுக்கப்படும் மருந்துகளுக்காக ஒரு இலட்சம் ரூபாவரை செலவிடப்படுகிறது.
இந்நிலையில், நாட்டில் ஆண்டொன்றுக்கு விலங்கு கடிக்குள்ளாவோரில் 80 சதவீதமா னோர் விசர்நாய்க் கடிக்குள்ளானோர் என சுகாதார அமைச்சின் விபத்து தடுப்புப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
அதன்படி ஆண்டொன் றுக்கு 2 இலட்சத்து 40ஆயிரம் பேர் விசர்நாய்க் கடிக்குள்ளாகின்றனர். இவ்வாறான அனர்த் தங்களில் 50 சதவீதமான அனர்த்தங்கள் வீட்டில் இடம்பெறும் அனர்த்தங்களாகும்.
ஆகவே, வீட்டில் ஏற்படும் இவ்வாறான ஆபத்துகள் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.