Our Feeds


Friday, June 2, 2023

ShortNews Admin

மகிழ்ச்சியான அறிவிப்பு - 2 மணித்தியாலங்களில் பாஸ்போட்டை பெற்றுக்கொள்ள முடியும்



கடவுச்சீட்டை ஒருநாள் சேவையின் ஊடாக பெற்றுக்கொள்ள இரண்டு மணித்தியாலங்கள் மாத்திரம் செலவிடும் முறைமையொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

 

பத்தரமுல்லையில் உள்ள அந்த திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

 

சட்டவிரோதமாக பணத்தை பெற்றுக்கொண்டு கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கைககள் தொடர்பில்  தரகர்கள் உள்ளிட்ட 19 பேர் கைது செய்யபட்டிருந்தனர்.

 

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரியொருவரும் அதில் உள்ளடங்குகிறார்.

 

குறித்த மோசடி சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கடவுச்சீட்டு வழங்கும் பிரிவில் அதிக நெருக்கடி நிலைமை காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »