தென்மேற்கு ஈரானின் கோகிலுயே மாகாணத்தில் இருந்து போயர் அகமது மாகாணம் நோக்கி ஒரு லொரி சென்று கொண்டிருந்தது.
இரும்பு கம்பிகளை ஏற்றிக் கொண்டு சென்ற அந்த லொரியில் திடீரென பிரேக் செயலிழந்தது. இதனால் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த லொரி எதிரே வந்த வாகனங்கள் மீது மோதியது. இதனையடுத்து ஒன்றன்பின் ஒன்றாக 26 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகின.
மேலும் சாலையில் நடந்து சென்ற பாதசாரிகள் மீதும் இந்த வாகனங்கள் மோதி பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர். 25-க்கும் மேற்பட்டோருக்கு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றது.
இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே விபத்து நடந்த சாலையில் இருந்து வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டன.
அதன்பிறகே அங்கு இயல்பு நிலை திரும்பியது. இதனால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.