Our Feeds


Monday, June 5, 2023

Anonymous

இலங்கையில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணிக்கு 20 சதவீதம் அபராதம்!

 



ஹம்பாந்தோட்டைவில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், தாமதமாக பந்து வீச்சு வீதத்தை பேணியதற்காக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு போட்டி கட்டணத்தில் 20 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

 

ஆப்கானிஸ்தான் அணியினர் வழங்கப்பட்ட நேர இலக்கில் ஒரு ஓவர் தாமதாக பந்து வீசியிருப்பதாக சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐசிசி) போட்டி மத்தியஸ்தர் ரஞ்சன் மடுகல்லே தீர்மானித்தார்.

 

தாமதமான ஓவர் வீதம் குற்றங்கள் தொடர்பான ஐசிசி நடத்தை விதிகள் மற்றும் வீரர்களின் ஆதரவு பணியாளர்களுக்கான ஐசிசி நடத்தை விதி 2.22 இன் படி, வீரர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் பந்துவீசத் தவறினால், தாமதமாகும் ஒவ்வொரு ஓவருக்கும் போட்டி கட்டணத்தில் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்படும்.

 

இந்த நிலையில், அணித்தலைவர் ஹஷ்மத்துல்லா ஷாஹிடி குற்றத்தை ஒப்புக்கொண்டார். முன்மொழியப்பட்ட அபராதத்தையும் அவர் ஏற்றுக்கொண்டார். எனவே முறையான விசாரணை தேவையில்லையென சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.

 

கள நடுவர்கள் நிதின் மேனன் மற்றும் பிரகீத் ரம்புக்வெல்ல, மூன்றாவது நடுவர் மைக்கேல் கோஃப் மற்றும் நான்காவது நடுவர் லிண்டன் ஹன்னிபால் ஆகியோர் இந்த குற்றச்சாட்டை சுமத்தினர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »