2025ம் ஆண்டில் ஆண்கள் கழகங்களுக்கு இடையிலான பீபா உலகக் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டி ஐக்கிய அமெரிக்காவில் நடைபெறும் என பீபா அறிவித்துள்ளது.
2000 ஆம் ஆண்டு முதுல் நடைபெறும் கழக உலகக் கிண்ண சுற்றுபோட்டிகளில் இதுவரை தலா 7 கழகங்களே இப்போட்டிகளில் பங்குபற்றிவந்தன. 2025 கழக உலகக் கிண்ணப் போட்டிகளில் முதல் தடவையாக 32 கழகங்கள் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பீபா நிறைவேற்றுக்குழு அங்கத்தவர்களிடையே கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற இணையவழிக் கூட்டத்தின்போது. இப்போட்டிகளை நடத்தும் நாடாக பீபா தெரிவு செய்யப்பட்டது.
இதனால், தொடர்ச்சியாக 3 வருடங்களாக உலகின் 3 பெரிய கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டிகள் ஐக்கிய அமெரிக்காவில் நடைபெறவுள்ளன.
2024 ஆம் ஆண்டு கொபா அமெரிக்கா கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியை ஐக்கிய அமெரிக்கா நடத்தவுள்ளது.
2026 ஆம் ஆண்டு பீபா உலகக் கிண்ண சுற்றுப்போட்டியை கனடா, மெக்ஸிக்கோவுடன் இணைந்து ஐக்கிய அமெரிக்கா நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இறுதியாக மொரோக்காவில் நடைபெற்ற 2022 கழக உலகக் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டியல் சவூதி அரேபியாவின் அல் ஹிலால் கழகத்தை தோற்கடித்து றியல் மட்ரிட் கழகம் ஐந்தாவது தடவையாக சம்பியனாகியிருந்தது.