கலால் திணைக்களத்தின் புள்ளிவிபரத் தகவல்களின் பிரகாரம் மதுபான பாவனை சடுதியாக குறைந்துள்ளது. கசிப்பு உள்ளிட்ட ஏனைய சட்டவிரோத மதுபாவனைகள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில், ரிதிமாலிய எனுமிடத்தில் வித்தியாசமான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
கசிப்பை காய்ச்சி அதனை விற்பனைச் செய்வதற்கு தயாராக வைக்கப்பட்டிருந்த நிலையில் சுமார் ஒரு இலட்சத்து 90 ஆயிரம் லீற்றர் கைப்பற்றப்பட்டது. கசிப்பு காய்ச்சுவதற்கான உபகரணங்கள் கடந்த 29ஆம் திகதியன்று கைப்பற்றப்பட்டன. காய்ச்சியவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, வடிக்கட்டிய 5,000 லீற்றர் கசிப்புடன் அந்த ஆசிரியரின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருடைய மனைவி பிரதேச செயலார் காரியாலயத்தில் பணியாற்றுகின்றார் என்றும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.