Our Feeds


Tuesday, June 27, 2023

Anonymous

‘அஸ்வெசும’ திட்டம் தொடர்பில் 190,000 மேன்முறையீடுகள்!

 



‘அஸ்வெசும’ நலன்புரி உதவித் திட்டத்தின் பயனாளிகள் பட்டியல் தொடர்பில் இதுவரை 190,000 மேன்முறையீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.


இதன்படி, இதுவரை 188,794 மேன்முறையீடுகளும் 3,304 ஆட்சேபனைகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.


இதேவேளை மேலதிக விசாரணைகளுக்கு, பொது மக்கள், வார நாட்களில் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை ‘1924’ என்ற அவசர தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »