சூடான் நாட்டில் இராணுவம் மற்றும் துணை இராணுவ படையினருக்கு இடையேயான சண்டை பல வாரங்களாக தீவிரமடைந்துள்ளது.
சூடானில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் ஐந்து குழந்தைகள் உட்பட குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
சூடான் இராணுவத்திற்கும், பாராமிலிட்டரி விரைவு ஆதரவுப் படைகளுக்கும் இடையேயான சண்டையில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
சூடானின் சுகாதார அமைச்சு வெளியிட்ட தகவல்படி, காயமடைந்த பொதுமக்கள் பலர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் 25 வீடுகள் முற்றிலும் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்தவர்களில் ஐந்து குழந்தைகள் மற்றும் அறியப்படாத எண்ணிக்கையிலான பெண்கள் மற்றும் முதியவர்கள் அடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.