கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இவ்வருட காலாண்டிலில் HIV தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார போசணை மற்றும் சுதேஷ வைத்திய அமைச்சின் தேசிய பாலியல் நோய் / எய்ட்ஸ் தடுப்பு வேலைத்திட்ட திணைக்களத்தின் புள்ளிவிபரத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022ம் ஆண்டின் முதல் காலாண்டில் 4,404 எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் இவ்வாண்டில் அது சுமார் 600 பேரால் அதிகரித்து 5,011 ஆக பதிவாகியுள்ளது.
அதேபோல் இவ்வருடத்தின் முதற்காலாண்டில் 3,806 ஆண்கள், 1,361 பெண்கள் நாடளாவிய ரீதியில் HIV தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக இனங்காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, 15 வயதுக்கும் 24 வயதுக்கும் இடைப்பட்ட 23 ஆண்களும் மூன்று பெண்களும் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்
HIV தொற்றால் பாதிக்கப்படும் பெண்களை விட ஆண்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளமை அந்த புள்ளிவிபரத் தகவலின் மூலம் தெரிய வருகிறது.
அதேவேளை மாற்றுப்பாலினத்தவர்கள் ஒன்பது பேரும் HIV தொற்றுக்கு உள்ளாகியுள்ளமைடன் இனங்காணப்பட்டுள்ளனர்.
HIV தொற்றினால் இவ்வாண்டில் இதுவரையிலான காலப்பகுதியில் 15 பேர் உயிரிழந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.