குறித்த பேருந்து லாகூருக்கு பயணிகளுடன் சால்ட் மலையில் சென்று கொண்டிருந்த போது பேருந்து வளைவு ஒன்றில் திரும்பிய நிலையில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.
விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர் பேருந்தில் சிக்கி இருந்தவர்களை மீட்டுள்ளனர்.
குறித்த விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்புப் படையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்த விபத்தில், பெண்கள், குழந்தைகள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், மருத்துவமனையில் 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பில் மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.