பிலிப்பைன்ஸ் நாட்டின் சிக்யூஜொர் மாகாணத்தில் இருந்து பொஹல் மாகாணத்திற்கு இன்று பயணிகள் படகு புறப்பட்டு சென்றுள்ளது.
அந்த படகில் 120க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்துள்ளனர். குறித்த படகு நடுக்கடலில் சென்றுகொண்டிருந்தபோது படகில் திடீரென தீ பிடித்துள்ளது. தீ விரைவாக படகு முழுவதும் பரவியுள்ளது.
இதனால் படகில் இருந்தவர்கள் கடலில் குதித்து தங்கள் உயிரை காப்பாற்ற முயற்சித்துள்ளனர்.
இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்த மீட்புப்படையினர் படகில் இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.