2023 ஆம் ஆண்டில் இது வரையில் சைபர் குற்றங்கள் தொடர்பான 1,187 முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளன.
இதுபோன்ற முறைப்பாடுகள் தொடர்பாக 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸார் மேலும் தெரிவிக்கையில்,
அவற்றில் 108 முறைப்பாடுகள் சமூக ஊடகங்கள் மற்றும் பிற ஒன்லைன் ஊடகங்கள் மூலம் செய்யப்பட்ட நிதிக் குற்றங்கள் தொடர்பானவை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சலுகைகள் மற்றும் விளம்பரப் பொருட்கள் தொடர்பான சமூக ஊடகங்கள் மூலம் அனுப்பப்படும் குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள் மற்றும் செய்திகளை கவனத்தில் கொள்ளுமாறு பொதுமக்களை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் தெரியாத நபர்களுக்கு தனிப்பட்ட தகவல்களை வழங்குவதை தவிர்க்குமாறும் பொலிஸார் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.
இதற்கிடையில், கொவிட்-19 நெருக்கடி காலத்தில் சைபர் குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளன.